அதிவேக அரைசதப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து சிஎஸ்கே வீரர் சாதனை!

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐ.பி.எல் தொடரில், லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் வீரர் உர்வில் படேல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிரடிச் சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே லக்னோ அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த உர்வில் படேல், வெறும் 13 பந்துகளில் தனது அரைச்சதத்தை பூர்த்தி செய்தார்.

இதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் அதிவேக அரைச்சதம் கடந்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்திருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் (13 பந்துகள்) சாதனையை உர்வில் படேல் சமன் செய்துள்ளார்.

ஐ.பி.எல் வரலாற்றில் அதிவேக அரைச்சதங்கள்:

உர்வில் படேல் – 13 பந்துகள் (2026)

யஷஸ்வி ஜெய்ஸ்வால் – 13 பந்துகள் (2023)

கே.எல். ராஹுல் – 14 பந்துகள் (2018)

பெட் கமின்ஸ் – 14 பந்துகள் (2022)

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore