I-Road திட்டம்: சம்மாந்துறையில் 4.66 கி.மீ வீதி காபட் பணிகள் – ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை

ஆசியா அபிவிருத்தி வங்கியின் (ADB) நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் I-Road திட்டத்தின் கீழ், சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட புதிய வளத்தாப்பிட்டி, பழைய வளத்தாப்பிட்டி, பவளவெளி, இஸ்மாயில்புரம் ஆகிய பகுதிகளை இணைக்கும் 4.66 கிலோமீற்றர் நீளமான வீதியை காபட் வீதியாக மாற்றும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தாஹிரா வித்தியாலத்திற்கு முன்பாக அமைந்துள்ள பள்ளிவாசல் குறுக்கு வீதியில் காணப்பட்ட தனிநபர் ஆக்கிரமிப்புகள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ பதில் தவிசாளர் வீ. வினோகாந்த் அவர்களின் தலைமையில், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திட்ட பொறியாளர் லோகதாஸ், வளத்தாப்பிட்டி-01 கிராம சேவகர் எம். உதயராஜன், வளவு உரிமையாளர்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் இணைந்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

👉 இந்த நடவடிக்கைகள், வீதி அபிவிருத்தி பணிகளை தடை இல்லாமல் விரைவாக நிறைவேற்றும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore