கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு புதிய கணக்காளராக சம்மாந்துறை நசீமுல் ஹக் நியமனம்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் புதிய கணக்காளராக திரு. எம்.ஆர். நசீமுல் ஹக் (SLAcS-1) அவர்கள் இன்று (02.04.2026 அன்று) கடமைகளை அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் வைத்தியசாலை பணிப்பாளர் திரு. ஜி. சுஹுனன் உள்ளிட்ட அதிகாரிகள், மேலும் இறக்காமம் பிரதேச செயலாளர் மற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளரும் கலந்து கொண்டனர்.

புதிய கணக்காளர் திரு. நசீமுல் ஹக் அவர்கள், முன்னாள் அதிபரும் காழி நீதிபதியுமான ரூஹுல்லா மௌலவி அவர்களின் மகனாவார்.

அவரது ஆரம்பக் கல்வியை சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் கல்லூரி மற்றும் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் பெற்ற அவர், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் வணிக இளமானிப் பட்டத்தை (Second Class Upper) பெற்றுள்ளார். தொடர்ந்து ஜப்பான் நாட்டில் ஹிரோஷிமா பல்கலைக்கழகத்தில் பொருளியல் முதுகலை பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்

மேலும், கல்முனை மாநகர சபை, முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை, இறக்காமம் பிரதேச சபை மற்றும் அம்பாறை மாவட்ட செயலகம் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களில் கணக்காளராக பணியாற்றிய அனுபவம் கொண்டவராகவும், தற்போது இலங்கை கணக்காளர் சேவையில் தரம் 1 அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார்.

அவரது புதிய பதவிக்காக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்கால பணிகள் சிறக்க வேண்டியும் நல்வாழ்த்துக்கள் கூறப்பட்டுள்ளன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore