சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் வருடாந்த இப்தார் நிகழ்வு!

2026 ஆண்டுக்கான வருடாந்த இப்தார் நிகழ்வு சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிஷாந்த பிரதீப் குமார தலைமையில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் இன்று (14) சனிக்கிழமை நடைபெற்றது.

சமூக நல்லிணக்கம் இப்தாராக இடம்பெற்ற இந்நிகழ்வில் நோன்பின் மாண்புகளை பற்றி சிங்களத்தில் அல்ஹாஜ் மௌலவி ஹுஸைன் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராய்ச்சி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததோடு கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார், சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.முஹம்மது ஹனீபா,மேல் நீதிமன்ற அரச சட்டத்தரணி லாபீர் சட்டமுதுமானி எம்.ஏ.எம்‌.லாபீர், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம். றசாட், சம்மாந்துறை நீதிமன்ற சட்டத்தரணிகள், சம்மாந்துறை பொலிஸ் நிலைய உபதேச குழுவின் தவிசாளர் ஏ.ஜே. காமில் இம்டாட், கல்முனை, பெரியநீலாவணை, சவளக்கடை, நிந்தவூர், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், அரச திணைக்கள உயர் அதிகாரிகள், ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், சர்வ மதத்தலைவர்கள், வர்த்தக சங்க மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதானிகள், முக்கியஸ்தர்கள் ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore