2026 வலயமட்ட வலைப்பந்து மற்றும் கரப்பந்து போட்டிகளில் அல் மார்ஜான் தேசிய பாடசாலை மாணவிகள் முழுமையான சாம்பியன் வெற்றி!

2026 ஆம் ஆண்டுக்கான வலயமட்ட வலைப்பந்து போட்டிகள் (06) அல் மார்ஜான் தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது

போட்டிகளில் U16, U18 மற்றும் U20 ஆகிய மூன்று வயது பிரிவுகளிலும் அல் மார்ஜான் தேசிய பாடசாலை மாணவிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.

இப்போட்டியில் இரண்டாம் இடத்தை Sammanthurai Muslim Central College பெற்றுள்ளது.

மேலும், (07) சம்மந்துறை ஸ்ரீகோரக்கர் தமிழ் மஹா வித்தியாலைய மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு கரப்பந்து போட்டியிலும் அல் மார்ஜான் தேசிய பாடசாலை மாணவிகள் U16, U18 மற்றும் U20 ஆகிய அனைத்து பிரிவுகளிலும் மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

இப்போட்டியில் U16 மற்றும் U18 பிரிவுகளில் இரண்டாம் இடத்தை சம்மந்துறை ஸ்ரீகோரக்கர் தமிழ் மஹா வித்தியாலையம் பெற்றதுடன், U20 பிரிவில் செந்நெல் சாஹிரா வித்தியலயம் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

இரண்டு நாட்களிலும் நடைபெற்ற போட்டிகளில் அல் மார்ஜான் தேசிய பாடசாலை மாணவிகள் பெற்ற இந்த தொடர்ச்சியான வெற்றிகள், வலயமட்ட கரப்பந்து வலைப்பந்து துறையில் அந்த பாடசாலையின் முழுமையான ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore