மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!

தமிழக முதல்வராக பொறுப்பேற்று நேற்று (10) கொண்ட விஜய், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு மரியாதை நிமித்தமாக நேரில் வந்த முதல்வர் விஜய் அவரிடம் வாழ்த்து பெற்றார்.

முன்னதாக தங்களது வீட்டிற்கு வந்த முதல்வர் விஜய்யை, வாசலுக்கு வந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்முகத்துடன் கட்டியணைத்து வரவேற்றார். இதனை தொடர்ந்து வீட்டிற்குள் வந்த முதல்வர் விஜய்யை, ஸ்டாலினும் வீட்டிற்குள் வருமாறு வரவேற்று ஆரத்தழுவி அழைத்து சென்றார்.

இதனையடுத்து வீட்டிற்குள் சென்ற முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மலர்செண்டு கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் மரியாதை செய்தார். இதனை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் விஜய்க்கு பொன்னாடை அணிவித்து பரஸ்பரம் மரியாதை அளித்தார்.

சென்னை, ஆழ்வார்பேட்டை மு.க.ஸ்டாலின் இல்லம் சென்ற முதலமைச்சர் விஜய்க்கு “காலத்தின் நிறம் ‘கருப்பு சிவப்பு’ – திமுக 75″ என்ற நூலை பரிசாக வழங்கி, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore