நேற்று (08) நாட்டில் பதிவான அதிகூடிய மழைவீழ்ச்சி ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கிராம (Kirama) பகுதியில் 117 மில்லிமீட்டராக பதிவாகியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பல இடங்களில் கனமழை பெய்து வருகின்ற நிலையில், இந்த அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை அவதானிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.




