பாலஸ்தீனுக்கான இலங்கையின் புதிய பிரதிநிதி பதவியேற்புgym

பாலஸ்தீன் நாட்டிற்கான இலங்கையின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள M. F. Mohamed Fawzer, செவ்வாய்க்கிழமை (06) ரமல்லாவில் அமைந்துள்ள இலங்கை பிரதிநிதி அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.

பதவியேற்பின் பின்னர் அலுவலக ஊழியர்களை சந்தித்து உரையாற்றிய அவர், இலங்கை மற்றும் பாலஸ்தீன் நாடுகளுக்கிடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

அத்துடன், பாலஸ்தீனில் வாழும் இலங்கையர்களுக்கான சேவைகளை மேலும் மேம்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், அண்மைய காலமாக பாலஸ்தீனில் நிலவி வரும் சவாலான சூழ்நிலைகளின் மத்தியிலும் அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் சேவையாற்றிய அலுவலக ஊழியர்களுக்கு அவர் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore