Mumbai நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான தடயவியல் பரிசோதனையில், அவர்கள் சாதாரண உணவு விஷத்தால் அல்லாது “விஷப்புகுத்தலால்” உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
45 வயதான Abdullah Dokadia, அவரது மனைவி Nasreen Dokadia மற்றும் மகள்கள் Zainab Dokadia (13), Ayesha Dokadia (16) ஆகியோர் தங்களது உறவினர்களுக்கு இரவு விருந்தளித்திருந்தனர்.
விருந்தில் மட்டன் புலாவ் வழங்கப்பட்டதுடன், உறவினர்கள் வெளியேறிய பின்னர் அதிகாலை 1 மணியளவில் குடும்பத்தினர் தர்பூசணி பழத்தை உட்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து அதிகாலை 5 மணியளவில் அனைவருக்கும் கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதுடன், சில மணி நேரங்களுக்குள் நால்வரும் உயிரிழந்துள்ளனர்.
தடயவியல் பரிசோதனையில், எலி விஷத்தில் பயன்படுத்தப்படும் “Zinc Phosphite” எனப்படும் நச்சு இரசாயனத்தின் தடயங்கள் உயிரிழந்தவர்களின் உடல்களிலும், அவர்கள் சாப்பிட்ட தர்பூசணி மாதிரிகளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த நச்சு பொருள் தவறுதலாக பழத்தில் கலந்ததா அல்லது திட்டமிட்டு செலுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு முன்னர் நடத்தப்பட்ட உடற்கூறு பரிசோதனைகளில், மூளை, இதயம் மற்றும் குடல் உள்ளிட்ட சில உடல் உறுப்புகள் பச்சை நிறமாக மாறியிருந்ததாகவும், அது விஷப்புகுத்தலுக்கான அறிகுறி எனவும் தெரியவந்திருந்தது.
அதேவேளை, Morphine எனப்படும் வலிநிவாரண மருந்தின் தடயங்களும் அப்துல்லா டோகாடியாவின் உடலில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தற்செயலான மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.




