மல்வத்தை-04 கணபதிபுரம் ஸ்ரீ முருகன் விளையாட்டுக்கழகமும், அப்பகுதி பொது அமைப்புகளும் இணைந்து ஏற்பாடு செய்த “சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா” அண்மையில் கணபதிபுரம் விளையாட்டு மைதானத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.
பண்டைய கலாசார விழுமியங்களை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கிலும், கிராம மக்களிடையே ஒற்றுமையை பலப்படுத்தும் வகையிலும் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.முஹம்மது ஹனீபா அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
அத்துடன், கிராம சேவகர் என்.புனவராஜ், கிராமத்தின் முக்கியஸ்தர்கள், விளையாட்டுக்கழக நிர்வாகிகள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பாரம்பரிய மற்றும் நவீன விளையாட்டுப் போட்டிகள் பல நடத்தப்பட்டு, வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் கௌரவிப்புகளும் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதேச செயலாளர் கருத்து தெரிவிக்கையில்… விளையாட்டுத்துறை எவ்வாறு இளைஞர்களின் ஆளுமை வளர்ச்சிக்கும், இன நல்லிணக்கத்திற்கும் பங்களிக்கின்றது என்பதை வலியுறுத்திக் கூறியதோடு, கிராமத்தின் விளையாட்டு ஆர்வத்தையும், பொது அமைப்புகளின் ஒருங்கிணைப்பையும் பாராட்டிப் பேசினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




