அம்பாறை மாவட்ட உயிர் பாதுகாப்பு மற்றும் அவசரகால மீட்புக் குழுவிற்கு புதிய இடைக்கால தலைவர் தெரிவு!

அம்பாறை மாவட்ட உயிர் பாதுகாப்பு மற்றும் அவசரகால மீட்புக் குழுவின் மாதாந்த கூட்டம் கடந்த மே மாதம் (01) திகதி சம்மாந்துறை புரூட் பார்க் (Fruit Park) வளாகத்தில் நடைபெற்றது.

மாவட்டத்தின் அவசரகால மீட்புப் பணிகளை மீளாய்வு செய்யவும், எதிர்காலத் திட்டங்களை வகுப்பதற்குமாக இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

​இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இதன்போது, கடந்த ஏழு மாத காலமாக உயிர் காப்பு மற்றும் அவசரகால மீட்புப் பயிற்சிகளுக்கு அனுசரணை வழங்கி வந்த ‘அல் உஸ்வா’ நிறுவனத்தின் பயிற்சி காலம் நிறைவடைந்ததை முன்னிட்டு, அதன் தலைவர் முஸ்தபா மௌலவி அவர்கள் தனது பதவியிலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

​அதனைத் தொடர்ந்து, எதிர்வரும் காலங்களில் இக்குழுவின் செயற்பாடுகளைத் தொடர்ச்சியாகவும் வினைத்திறனாகவும் முன்னெடுத்துச் செல்லும் வகையில், அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் முன்னிலையில் புதிய   இடைக்கால தலைவராக NTM. JAMEEN நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore