மாலத்தீவு ஜனாதிபதி Mohamed Muizzu அவர்கள் இலங்கைக்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இன்று கொழும்பில் அரச மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.
இவ்வரவேற்பு விழா, இலங்கை ஜனாதிபதி Anura Kumara Dissanayake அவர்களின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) இலங்கை வந்தடைந்த மாலத்தீவு ஜனாதிபதி, 2023ஆம் ஆண்டு பதவியேற்றதையடுத்து மேற்கொள்ளும் முதல் இலங்கை விஜயமாக இது அமைந்துள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களின் அழைப்பின் பேரில் நடைபெறும் இவ்விஜயம், மே 06ஆம் தேதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கிடையிலான நீண்டநாள் நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இருதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.
மேலும், இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்திடப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த விஜயத்தை முன்னிட்டு மே 03 முதல் மே 06 வரை கொழும்பு நகரில் சிறப்பு போக்குவரத்து திட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.




