Hind Rajab Foundation, இஸ்ரேல்–அமெரிக்க இரட்டை குடியுரிமை கொண்ட சிப்பாய் ஜேக் பர்கன்ஸ் மீது போர் குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கை அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வ புகார் அளித்துள்ளது.
அந்த அமைப்பு தெரிவித்ததாவது, Jake Burkons காசா பகுதியில் நடந்த இராணுவ நடவடிக்கைகளில் பொதுமக்கள் வசிக்கும் கட்டிடங்கள் அழிக்கப்பட்ட சம்பவங்களில் ஈடுபட்டதாக ஆதாரங்கள் உள்ளதாக கூறுகிறது.
அவர் இஸ்ரேல் இராணுவத்தின் 603வது காம்பாட் இன்ஜினியரிங் பட்டாலியனில் பணியாற்றியதாகவும், 2023 அக்டோபர் 7 நிகழ்வுகளுக்குப் பிறகு தன்னார்வமாக இணைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது அவர் இலங்கையில் பயணம் செய்து வருகிறார் எனவும் HRF குறிப்பிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை அரசை அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இந்த விவகாரம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள நிலையில், பொறுப்புக் கண்காணிப்பு மற்றும் சட்ட நடவடிக்கை அவசியம் என மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.





